• Jun 16 2025

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!

Thansita / Jun 15th 2025, 8:34 pm
image

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மீண்டும் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் இன்று  காலை 10 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) கிருஸ்னமூர்த்தி, (செயலாளர்) மயூரதன், (பொருளாளர்) தியாகர் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


எதிர்பார்த்தாவாறே மீண்டும் இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.



வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மீண்டும் இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் இன்று  காலை 10 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க கட்டிடத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) கிருஸ்னமூர்த்தி, (செயலாளர்) மயூரதன், (பொருளாளர்) தியாகர் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.எதிர்பார்த்தாவாறே மீண்டும் இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement