• Oct 13 2026

கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மீட்பு!

Chithra / Oct 13th 2026, 3:23 pm
image


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடையது எனக் கருதப்படும் சீருடை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையின் பின்புறப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் குழியொன்று தோண்டப்பட்டபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மீட்கப்பட்ட சீருடை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


சீருடை குறித்த பகுதியில் எவ்வாறு புதைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மீட்பு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடையது எனக் கருதப்படும் சீருடை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையின் பின்புறப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் குழியொன்று தோண்டப்பட்டபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் சீருடை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மீட்கப்பட்ட சீருடை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.சீருடை குறித்த பகுதியில் எவ்வாறு புதைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement