சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரபையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர்சகீலா இஸ்ஸதீன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் உட்பட வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவராக வைத்தியர் ஏ.எம்.மிஸ்பாஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான எம். எஸ்.எம். முபாரக், பொறியியலாளர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர், தாதிய விரிவுரையாளர் எம்.சி.எம்.சி. றிழா, தாதிய உத்தியோகத்தர் ஏ.எச். நியாஸ், புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். எஸார், ஆசிரியர்எம்.பி.எம். பௌஸான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஜ்ஹர், வர்த்தகர்களான ஏ. கபீர், பி.பி. நபார், ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகளாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு புதிய அபிவிருத்திக் குழு நியமனம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழு (Hospital development commitee) நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.இதன் போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரபையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர்சகீலா இஸ்ஸதீன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ். இம்தியாஸ் உட்பட வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவராக வைத்தியர் ஏ.எம்.மிஸ்பாஹ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான எம். எஸ்.எம். முபாரக், பொறியியலாளர் எஸ்.எம். ஆரீஸ் அக்பர், தாதிய விரிவுரையாளர் எம்.சி.எம்.சி. றிழா, தாதிய உத்தியோகத்தர் ஏ.எச். நியாஸ், புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். எஸார், ஆசிரியர்எம்.பி.எம். பௌஸான் கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அஜ்ஹர், வர்த்தகர்களான ஏ. கபீர், பி.பி. நபார், ஏ.எம். அபூபக்கர் ஆகியோர் உறுப்பினர்களாகளாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.