• May 24 2026

கனமழையிலும் இடைவிடாது போராடும் முத்துநகர் விவசாயிகள்; குழந்தைகளுடன் வறுமையில் வாடும் பெற்றோர்கள்!

Chithra / Oct 24th 2025, 3:24 pm
image

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் இன்றும் (24) 38 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை அடுத்து அதனை மீள பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருகோணமலை மாவட்ட செயலகம் முன் அடைமழையையும் பாராது விவசாயிகள் தங்களது சிறு குழந்தைகளுடனும் தீர்வு கோரி போராடி வருகின்றனர்.

இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,

மழை காலங்களில் நாங்கள் நனைந்து போராடுவதை அரசாங்கம் ரசிக்கிறதா? எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன. 

இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமாகவில்லை.

அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். எமது கஷ்டத்தை உணருங்கள்.  கைக் குழந்தையுடன் பெற்றார்கள் வறுமையில் வாடுகின்றனர். எனதெரிவித்தனர். 


கனமழையிலும் இடைவிடாது போராடும் முத்துநகர் விவசாயிகள்; குழந்தைகளுடன் வறுமையில் வாடும் பெற்றோர்கள் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கொட்டும் கனமழையிலும் இன்றும் (24) 38 ஆவது நாளாக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணமாக மழையில் நனைந்து குறித்த விவசாயிகள் தங்களது விவசாய நிலம் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டதை அடுத்து அதனை மீள பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருகோணமலை மாவட்ட செயலகம் முன் அடைமழையையும் பாராது விவசாயிகள் தங்களது சிறு குழந்தைகளுடனும் தீர்வு கோரி போராடி வருகின்றனர்.இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,மழை காலங்களில் நாங்கள் நனைந்து போராடுவதை அரசாங்கம் ரசிக்கிறதா எங்களுக்கான தீர்வை இப்படி தான் தருவோம் என்பதை எழுத்து மூலமாக அறிவித்தால் என்ன. இதற்கு முன்னர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவ்வளவு அதிகாரிகளுக்குள்ளும் சொல்லப்படும் விடயங்கள் சாத்தியமாகவில்லை.அரசாங்கத்தை நம்பியே இங்கு மழையில் நனைந்து தீர்வு கேட்கிறோம். எமது கஷ்டத்தை உணருங்கள்.  கைக் குழந்தையுடன் பெற்றார்கள் வறுமையில் வாடுகின்றனர். எனதெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement