• Jul 13 2026

மன்னார் நறுவலிக்குளம் சர்வதேச விளையாட்டு மைதானம்-கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் நேரில் ஆய்வு!

Ziya / Jul 13th 2026, 3:15 pm
image

மன்னார் நறுவலிக்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்த சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் மிக விரைவாக முன்னெடுத்து வருகிறது.


இதன் ஒரு கட்டமாக, குறித்த விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (ஜூலை 12) மன்னாரிற்கு நேரில் வருகை தந்து மைதான பணிகளை பார்வையிட்டார்.


கடந்த காலங்களில் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எந்தவித இடைவெளியும் இன்றி கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.


இதனால், மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கனவான சர்வதேச தரத்திலான இந்த விளையாட்டு மைதானம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய இந்த களப்பார்வையின் போது, விளையாட்டுத்துறை அமைச்சருடன் மன்னார் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர்கள்,விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினர்.



மன்னார் நறுவலிக்குளம் சர்வதேச விளையாட்டு மைதானம்-கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் நேரில் ஆய்வு மன்னார் நறுவலிக்குளம் பகுதியில் பல ஆண்டுகளாக அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்த சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமானப் பணிகளை, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் மிக விரைவாக முன்னெடுத்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக, குறித்த விளையாட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (ஜூலை 12) மன்னாரிற்கு நேரில் வருகை தந்து மைதான பணிகளை பார்வையிட்டார்.கடந்த காலங்களில் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பணிகளைப் பொறுப்பேற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எந்தவித இடைவெளியும் இன்றி கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.இதனால், மன்னார் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கனவான சர்வதேச தரத்திலான இந்த விளையாட்டு மைதானம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய இந்த களப்பார்வையின் போது, விளையாட்டுத்துறை அமைச்சருடன் மன்னார் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர்கள்,விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு, கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடினர்.

Advertisement

Advertisement

Advertisement