• Jul 13 2026

யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை; இரத்தக்கறை படிந்த காரில் வாள்களுடன் ஐவர் கைது

Chithra / Jul 10th 2026, 12:35 pm
image


திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் - 


யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.


கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல், அவ் இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை  யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில்  விடுவித்துள்ளனர்.


இந்நிலையில் குறித்த கார் வேகமாக செலுத்திச் சென்றபோது வீதிக்கடமையில்  இருந்த பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.


சந்தேகமுற்ற பொலிசார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர். சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.


இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை  குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


யாழில் இளைஞனை கடத்தி சித்திரவதை; இரத்தக்கறை படிந்த காரில் வாள்களுடன் ஐவர் கைது திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் - யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல், அவ் இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை  யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில்  விடுவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த கார் வேகமாக செலுத்திச் சென்றபோது வீதிக்கடமையில்  இருந்த பொலிஸ் இடைமறித்தபோது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.சந்தேகமுற்ற பொலிசார் குறித்த காரை துரத்திச் சென்று இடைமறித்து சோதித்துள்ளனர். சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சேட்டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இதேவேளை  குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement