கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால் நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல் திறக்கப்படவுள்ளது.
வருடாந்தம் நடைபெறும் இந்தப் புனிதப் பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, காட்டுவழியாகப் பயணித்து கதிர்காமத்தை அடைவார்கள்.
இன்று முதல் பக்தர்கள் குறித்த காட்டுவழி பாதையினூடான பத்தி பயணத்தை தொடங்குவார்கள்.
எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும் கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கோலாகமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், குமண தேசிய பூங்காவில் இருந்து ஆரம்பமாகும் இந்த காட்டுவழிப்பாதை கதிர்காமம் வரை சென்றடையும் மிகவும் கரடுமுரணான இந்த தொண்மைவாய்ந்த காட்டு வழி பாதையை பக்தர்கள் அவதானத்துடன் கடந்து செல்லுமாறும் பாதுகாப்பு பிரிவினர் கேட்டுகொண்டுள்ளனர்.
தொடர்ந்து 24ஆம் திகதி மாலை 3 மணிக்கு குறித்த காட்டுவழிப்பாதை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கதிர்காம பக்த அடியார்களுக்காக இன்று முதல் திறக்கப்படும் காட்டுவழிப்பாதை கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு, பல நூறு மைல்கள் கால் நடையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களுக்காக, காட்டுவழிப் பாதை இன்று முதல் திறக்கப்படவுள்ளது.வருடாந்தம் நடைபெறும் இந்தப் புனிதப் பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்து, காட்டுவழியாகப் பயணித்து கதிர்காமத்தை அடைவார்கள்.இன்று முதல் பக்தர்கள் குறித்த காட்டுவழி பாதையினூடான பத்தி பயணத்தை தொடங்குவார்கள். எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகும் கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா கோலாகமாக முன்னெடுக்கப்படவுள்ளது.மேலும், குமண தேசிய பூங்காவில் இருந்து ஆரம்பமாகும் இந்த காட்டுவழிப்பாதை கதிர்காமம் வரை சென்றடையும் மிகவும் கரடுமுரணான இந்த தொண்மைவாய்ந்த காட்டு வழி பாதையை பக்தர்கள் அவதானத்துடன் கடந்து செல்லுமாறும் பாதுகாப்பு பிரிவினர் கேட்டுகொண்டுள்ளனர்.தொடர்ந்து 24ஆம் திகதி மாலை 3 மணிக்கு குறித்த காட்டுவழிப்பாதை மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,