முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வருகின்றது.
திருகோணமலை
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை 3ஆம் கட்டை சந்தியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் நேற்றையதினம் (15)முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதுடன் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம் பெற்றதுடன் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், காணாமற் போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றியும் கருத்துக்களை பரிமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றது.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம்- மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது.
வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் ஏற்பாட்டில் தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (16) காலை இடம்பெற்றது.
"உடல் சிதைந்து உயிர் மடிந்த குருதியில் நனைந்து போன நிலம் மறந்து போகுமா? முள்ளிவாய்க்கால்" என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் ஏற்பாட்டில் ஐந்து இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதி, கோப்பாய் , வேலணை உள்ளிட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் பொருளாதார தடைகள், யுத்ததின் உக்கிரங்களால், ஒருவேளை சாப்பாட்டிற்கே மக்கள் பெரும் இடர்களை சந்தித்து வந்தனர். அதன் போது அவர்களின் பசியாற்றியது உப்பில்லா கஞ்சியே.
அந்த மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எமது அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தும் முகமாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வாரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்கிறோம் என சுலக்சன் தெரிவித்தார் .
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நினைவேந்தல் நாவற்குழியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நாவற்குழி வாழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.
நாவற்குழி சந்தி சுற்றுவட்டம் பகுதியில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு. முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வூர்வமாக இடம்பெற்று வருகின்றது.திருகோணமலைமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை 3ஆம் கட்டை சந்தியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் நேற்றையதினம் (15)முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதுடன் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம் பெற்றதுடன் நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில், காணாமற் போனோரின் உறவுகள், கிராமப்புற மக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்கள் துயர அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாழ்வுகளைப் பற்றியும் கருத்துக்களை பரிமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.வவுனியாதமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றது.வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.குறித்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணம்தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம்- மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது.வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.இதேவேளை, வடமராட்சி கிழக்கு தன்னார்வ இளைஞர்களின் ஏற்பாட்டில் தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (16) காலை இடம்பெற்றது."உடல் சிதைந்து உயிர் மடிந்த குருதியில் நனைந்து போன நிலம் மறந்து போகுமா முள்ளிவாய்க்கால்" என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை யாழ்ப்பாணத்தில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் ஏற்பாட்டில் ஐந்து இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதி, கோப்பாய் , வேலணை உள்ளிட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் பொருளாதார தடைகள், யுத்ததின் உக்கிரங்களால், ஒருவேளை சாப்பாட்டிற்கே மக்கள் பெரும் இடர்களை சந்தித்து வந்தனர். அதன் போது அவர்களின் பசியாற்றியது உப்பில்லா கஞ்சியே.அந்த மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எமது அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தும் முகமாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. முள்ளிவாய்க்கால் வாரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்கிறோம் என சுலக்சன் தெரிவித்தார் .இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நினைவேந்தல் நாவற்குழியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நாவற்குழி வாழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.நாவற்குழி சந்தி சுற்றுவட்டம் பகுதியில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.