• Oct 11 2024

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; 19 வயது இளைஞன் பரிதாப மரணம்..!

Chithra / May 8th 2024, 1:01 pm
image

Advertisement

 

குருநாகல் - பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  பெம்முல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். 

வதாகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெம்முல்லவிலிருந்து கஹவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கின்னேரியா பாலத்திற்கு அருகில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; 19 வயது இளைஞன் பரிதாப மரணம்.  குருநாகல் - பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  பெம்முல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். வதாகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பெம்முல்லவிலிருந்து கஹவத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கின்னேரியா பாலத்திற்கு அருகில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரது சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement