• Aug 09 2025

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; சம்பவ இடத்தில் இளைஞர் பலி - மற்றொருவர் படுகாயம்!

shanuja / Aug 8th 2025, 10:28 pm
image

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.  

ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது- 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (7) நடைபெற்ற கரப்பந்தாட்டத்தைப் பார்த்துவிட்டு இரண்டு இளைஞர்கள்  மோட்டார் சைக்கிளில் சென்றனர். 

அவ்வேளை பருத்தித்துறை வீதி, புத்தூர் சந்திக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி   விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரையும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த இளைஞன் உயிரிழந்தார்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

படுகாயமடைந்த மற்றைய இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; சம்பவ இடத்தில் இளைஞர் பலி - மற்றொருவர் படுகாயம் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.  ஆவரங்கால் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பரிஷ்ணன் அஜய் (வயது- 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (7) நடைபெற்ற கரப்பந்தாட்டத்தைப் பார்த்துவிட்டு இரண்டு இளைஞர்கள்  மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவ்வேளை பருத்தித்துறை வீதி, புத்தூர் சந்திக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி   விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரையும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த இளைஞன் உயிரிழந்தார்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.படுகாயமடைந்த மற்றைய இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement