முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுப்பு தான நடவடிக்கை, மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாயே இவ்வாறு மூளைச்சாவடைந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் மூளைச்சாவடைந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உறுப்பு தான நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை கிடைத்துள்ளது.
தாயின் திடீர் இழப்பு குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ள போதிலும், அந்தத் துயரமான தருணத்திலும் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உறுப்புகளைத் தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்து, மறுபுறம் இரண்டு குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவில் உயிரிழந்த தாய் இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுப்பு தான நடவடிக்கை, மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.முல்லைத்தீவு, உடுப்புக்குளம் நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சண்முகம் இந்திரா என்ற தாயே இவ்வாறு மூளைச்சாவடைந்துள்ளார்.கடந்த 15ஆம் திகதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் மாஞ்சோலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த அவர், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனையடுத்து, அவர் மூளைச்சாவடைந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உறுப்பு தான நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை கிடைத்துள்ளது.தாயின் திடீர் இழப்பு குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ள போதிலும், அந்தத் துயரமான தருணத்திலும் இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உறுப்புகளைத் தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்து, மறுபுறம் இரண்டு குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.