• Dec 28 2025

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்; அல்லலுறும் மக்கள்

Chithra / Dec 28th 2025, 11:30 am
image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணமுள்ளது. 

இதனால் பயிர்தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு, இப் பிரதேச மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து நேற்றையதினம் மாலை வேளையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக,பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்; அல்லலுறும் மக்கள் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணமுள்ளது. இதனால் பயிர்தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு, இப் பிரதேச மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனையடுத்து நேற்றையதினம் மாலை வேளையில், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக,பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement