மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே கிணற்றில் இருந்து மற்றொரு பெண் குற்றுயிராக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் அண்ணாத்துறை தர்சின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் மே 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இக்கொலைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை, அதன் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு இதன்போது நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்தக் கடத்தல் மற்றும் திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பான மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பை உலுக்கிய கொலை, கொள்ளை சம்பவங்கள் - 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே கிணற்றில் இருந்து மற்றொரு பெண் குற்றுயிராக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் அண்ணாத்துறை தர்சின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் மே 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இக்கொலைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை, அதன் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு இதன்போது நீதிமன்றம் கட்டளையிட்டது.இந்தக் கடத்தல் மற்றும் திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பான மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.