ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையின்றி வருத்தம் தெரிவிப்பதாக அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவதூறுக்கு 10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தாக்கல் செய்த வழக்கு தொடர்பான இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அவரது சட்ட பிரதிநிதிகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று நீதிமன்றில் நேரில் முன்னிலையானதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வழக்கில் பரஸ்பர தீர்வை எட்டினர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரகலய என்றழைக்கப்பட்ட போராட்ட காலத்தில் கிடைக்கப் பெற்ற பெருந்தொகை பணத்தை மோல்டா நாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும், சுமார் ஐந்து பில்லியன் ரூபா பணம் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளாகவும் திஸ்ஸ குட்டியாரச்சி கொழும்பில் வைத்து கடந்த 2023ம் ஆண்டு குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது தமது கருத்துக்காக வருந்துவதாக திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய முன்னாள் எம்.பி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி மன்னிப்பு கோரியுள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையின்றி வருத்தம் தெரிவிப்பதாக அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.அவதூறுக்கு 10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தாக்கல் செய்த வழக்கு தொடர்பான இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அவரது சட்ட பிரதிநிதிகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று நீதிமன்றில் நேரில் முன்னிலையானதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வழக்கில் பரஸ்பர தீர்வை எட்டினர்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரகலய என்றழைக்கப்பட்ட போராட்ட காலத்தில் கிடைக்கப் பெற்ற பெருந்தொகை பணத்தை மோல்டா நாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும், சுமார் ஐந்து பில்லியன் ரூபா பணம் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளாகவும் திஸ்ஸ குட்டியாரச்சி கொழும்பில் வைத்து கடந்த 2023ம் ஆண்டு குற்றம் சுமத்தியிருந்தார்.இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது தமது கருத்துக்காக வருந்துவதாக திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.