வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று (29) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 12.11 மணிக்கு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. ஆகும்.
நிலநடுக்கத்தினால் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் ஜெனரல் தீபானி வீரகோன்,
நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் இருந்து சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அளவு இலங்கையில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாகவும் அவர் கூறினார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியிருந்தாலும், இந்த நிகழ்வு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.
வங்காள விரிகுடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பா வெளியான தகவல் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று (29) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 12.11 மணிக்கு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. ஆகும்.நிலநடுக்கத்தினால் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை.இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் ஜெனரல் தீபானி வீரகோன், நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.இலங்கையில் இருந்து சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அளவு இலங்கையில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாகவும் அவர் கூறினார்.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகள் பதிவாகியிருந்தாலும், இந்த நிகழ்வு குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று அவர் மேலும் கூறினார்.