• Jul 30 2025

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை; தடையை மீறினால் 50 மில்லியன் டொலர் அபராதம்!

shanuja / Jul 29th 2025, 10:07 pm
image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


சமூக ஊடகங்களைத் தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு  அவுஸ்திரேலியா  நாடாளுமன்றம் நேற்று (28) ஒப்புதல் வழங்கியது. 

 

இதன்படி  ரிக்ரொக், பேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குத் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூப் தளமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 


தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், அது தீங்கு விளைவிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்தத் தடை; தடையை மீறினால் 50 மில்லியன் டொலர் அபராதம் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களைத் தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு  அவுஸ்திரேலியா  நாடாளுமன்றம் நேற்று (28) ஒப்புதல் வழங்கியது.  இதன்படி  ரிக்ரொக், பேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குத் முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யூடியூப் தளமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும், அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், அது தீங்கு விளைவிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement