• Aug 12 2025

செல்பி எடுக்க முயன்றவரை புரட்டி எடுத்த யானை! யானையிடம் சிக்கி சின்னாபின்னமானவர் வனத்துறையிடம் மன்னிப்பு கோரல்!

shanuja / Aug 12th 2025, 12:13 pm
image

காட்டு யானையிடம் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை, யானை துரத்திச் சென்று தாக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக காட்டிற்கு அருகே உள்ள வீதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்டிலிருந்து குறித்த வீதிக்கு வந்த காட்டு யானையை பலரும் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர்.

அதில் ஒரு நபர் யானைக்கு சற்று அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். சுற்றிலும் மக்களைப் பார்த்த யானை, குறித்த நபரையும் அவதானித்தது.

என்னுடனே செல்பி எடுக்க முயல்கிறியா என்ற கோணத்தில் கோவமடைந்த யானை, குறித்த நபரைத் தாக்க ஓடிச் சென்றது.

யானையிடமிருந்து தப்பிக்க குறித்த நபர் ஒட்டமெடுத்தார். எனினும் அவரால் ஓட முடியாமல் கீழே விழுந்தார். கிழே விழுந்த அவரை குறிப்பிட்ட செக்கனில் மிதித்து விட்டு யானை சென்றுள்ளது.

யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளார். யானை துரத்தும் போது பல மக்கள் வாகனங்களில் அந்த வீதியில் நின்று கொண்டிருந்தனர்.

எனினும் காட்டு யானையின் தோற்றத்தையும் கோவத்தையும் கண்ட மக்கள் பதறியடித்து ஓட ஆரம்பித்தனர்.

சம்பவத்தையடுத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபரை கண்டறிந்த வனத்துறையினர், யானையிடம் அத்துமீறியதற்காக அவருக்கு 25,000 ரூபா அபராதம் விதித்தனர்.

அத்துடன் யானையிடம் அத்துமீறியதற்காக , தனது தவறை உணர்ந்து குறித்த நபர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

யானையின் தாக்குதலில் குறித்த நபர் பதறியதும் மக்கள் ஓடிய காட்சியும் காணொளியாக வெளிவந்துள்ளது.

காட்டு யானைகளிடம் படம் எடுப்பதற்கோ, யானையுடன் விளையாட்டாக சீண்ட நினைத்தாலோ விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை குறித்த காணொளி எடுத்துக்காட்டுகின்றது.

செல்பி எடுக்க முயன்றவரை புரட்டி எடுத்த யானை யானையிடம் சிக்கி சின்னாபின்னமானவர் வனத்துறையிடம் மன்னிப்பு கோரல் காட்டு யானையிடம் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை, யானை துரத்திச் சென்று தாக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக காட்டிற்கு அருகே உள்ள வீதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டிலிருந்து குறித்த வீதிக்கு வந்த காட்டு யானையை பலரும் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர். அதில் ஒரு நபர் யானைக்கு சற்று அருகில் சென்று செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். சுற்றிலும் மக்களைப் பார்த்த யானை, குறித்த நபரையும் அவதானித்தது. என்னுடனே செல்பி எடுக்க முயல்கிறியா என்ற கோணத்தில் கோவமடைந்த யானை, குறித்த நபரைத் தாக்க ஓடிச் சென்றது. யானையிடமிருந்து தப்பிக்க குறித்த நபர் ஒட்டமெடுத்தார். எனினும் அவரால் ஓட முடியாமல் கீழே விழுந்தார். கிழே விழுந்த அவரை குறிப்பிட்ட செக்கனில் மிதித்து விட்டு யானை சென்றுள்ளது. யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் தெய்வாதீனமாக உயிர்பிழைத்துள்ளார். யானை துரத்தும் போது பல மக்கள் வாகனங்களில் அந்த வீதியில் நின்று கொண்டிருந்தனர். எனினும் காட்டு யானையின் தோற்றத்தையும் கோவத்தையும் கண்ட மக்கள் பதறியடித்து ஓட ஆரம்பித்தனர். சம்பவத்தையடுத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபரை கண்டறிந்த வனத்துறையினர், யானையிடம் அத்துமீறியதற்காக அவருக்கு 25,000 ரூபா அபராதம் விதித்தனர். அத்துடன் யானையிடம் அத்துமீறியதற்காக , தனது தவறை உணர்ந்து குறித்த நபர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.யானையின் தாக்குதலில் குறித்த நபர் பதறியதும் மக்கள் ஓடிய காட்சியும் காணொளியாக வெளிவந்துள்ளது. காட்டு யானைகளிடம் படம் எடுப்பதற்கோ, யானையுடன் விளையாட்டாக சீண்ட நினைத்தாலோ விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை குறித்த காணொளி எடுத்துக்காட்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement