• May 11 2025

இலங்கையில் இன்று அதிகாலை கோர விபத்து; 8 பேர் பலி - பலர் படுகாயம்

Chithra / May 11th 2025, 7:34 am
image

  

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். 

பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளது

விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இலங்கையில் இன்று அதிகாலை கோர விபத்து; 8 பேர் பலி - பலர் படுகாயம்   நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற பேருந்தே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி உள்ளதுவிபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement