கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெல்மடுல்லையில் இருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று,
பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து மற்றும் நேரெதிரில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் இந்த விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், நோயாளர்காவு வாகனத்தில் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த விபத்தினைத் தொடர்ந்து -கொழும்பு – பதுளை வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து பலர் வைத்தியசாலையில் கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இதன்போது பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெல்மடுல்லையில் இருந்து பலாங்கொடை நோக்கி பாடசாலை மாணவர்கள் உட்பட பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று,பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து மற்றும் நேரெதிரில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்அத்துடன் இந்த விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், நோயாளர்காவு வாகனத்தில் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை இந்த விபத்தினைத் தொடர்ந்து -கொழும்பு – பதுளை வீதியூடான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது