• Sep 11 2025

வீட்டைவிட்டு வௌியேறும் மகிந்தவை பார்க்க குவிந்த பிரதிநிதிகள்; மைத்திரியும் வீட்டை காலி செய்தார்!

Chithra / Sep 11th 2025, 12:07 pm
image



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  

மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வௌியானதை அடுத்து அவர்கள் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகிறார் 

நேற்று (10) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அவரும் அந்த சலுகையை இழந்துள்ளார். 

அதன்படி, அவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்  என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டைவிட்டு வௌியேறும் மகிந்தவை பார்க்க குவிந்த பிரதிநிதிகள்; மைத்திரியும் வீட்டை காலி செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன  மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வௌியானதை அடுத்து அவர்கள் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகிறார் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அவரும் அந்த சலுகையை இழந்துள்ளார். அதன்படி, அவர் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்  என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement