• Aug 04 2026

மஹர சிறைச்சாலை மோதல்: ரூ.15 கோடிக்கு மேல் சேதம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

Chithra / Aug 3rd 2026, 9:58 am
image


மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த மோதலின்போது சிறைச்சாலையின் பெரும்பாலான கட்டடங்களின் கூரைகள் மற்றும் ஓடுகள் சேதமடைந்துள்ளதுடன், புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் படி, 'சாத்தான்', 'அசார்', 'பட்டா' உள்ளிட்ட சில கைதிகள் இணைந்து பதற்றநிலையை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.


இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூசா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடே இந்தக் கலவரத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


சம்பவத்தின் போது நான்கு கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.


அதேவேளை, சுமார் 1,500 கைதிகள் கட்டப்பட்டு வந்த மதிலை உடைத்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அந்த முயற்சியைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மற்றொரு குழுவினர் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்கு தீ வைத்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடத்தையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.


மேலும், சில கைதிகள் மற்ற கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடங்களின் பூட்டுகளை உடைத்து அவர்களை வெளியேறச் செய்ததாகவும், வெளியே வர மறுத்த கைதிகள் மீது வன்முறையை வழிநடத்திய குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. மூன்று பேர் கொண்ட குழுவொன்று நேற்று முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


அதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷண சுபவிக்ரம தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல்: ரூ.15 கோடிக்கு மேல் சேதம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மோதலின்போது சிறைச்சாலையின் பெரும்பாலான கட்டடங்களின் கூரைகள் மற்றும் ஓடுகள் சேதமடைந்துள்ளதுடன், புனர்வாழ்வுத் திட்டங்களின் கீழ் தையல் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நள்ளிரவு வரை கைதிகள் சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளிப்புறத்தை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சில வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் படி, 'சாத்தான்', 'அசார்', 'பட்டா' உள்ளிட்ட சில கைதிகள் இணைந்து பதற்றநிலையை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 104 கைதிகள் பூசா உள்ளிட்ட மேலும் ஏழு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போதைப்பொருள் தட்டுப்பாடே இந்தக் கலவரத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.சம்பவத்தின் போது நான்கு கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான உபகரணங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.அதேவேளை, சுமார் 1,500 கைதிகள் கட்டப்பட்டு வந்த மதிலை உடைத்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அந்த முயற்சியைத் தடுக்க சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், மற்றொரு குழுவினர் சிறைச்சாலையின் கட்டடமொன்றுக்கு தீ வைத்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடத்தையும் உடைத்து அங்கிருந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.மேலும், சில கைதிகள் மற்ற கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடங்களின் பூட்டுகளை உடைத்து அவர்களை வெளியேறச் செய்ததாகவும், வெளியே வர மறுத்த கைதிகள் மீது வன்முறையை வழிநடத்திய குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. மூன்று பேர் கொண்ட குழுவொன்று நேற்று முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.அதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷண சுபவிக்ரம தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement