நல்லூரானின் நேற்றைய 9ஆம் திருவிழாவில் வள்ளி,தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளித்த தருணம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது.
ஒவ்வொரு நாள் திருவிழாவும் பக்தர்களை மெய்சிலிர்க்கும் விதமாக முருகப் பெருமான் அலங்காரங்களுடன் காட்சியளித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய ஒன்பதாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி ,தெய்வானை ஆகியோருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
அலங்காரக் கந்தன் எனப் போற்றப்படும் நல்லூர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனத்தில் காட்சியளித்தது மக்களின் கண்களையும் உள்ளங்களையும் கவர்ந்துள்ளது.
பக்தர்களின் மனதை நெருடும் வகையில் நல்லூரானின் மஹோற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மஞ்சத் திருவிழா நடைபெறவுள்ளது.
இன்றைய மஞ்சத்திருவிழாவிலும் முருகன் பல அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.
வள்ளி, தெய்வானையுடன் யானையில் வலம் வந்த முருகன் ; 9 ஆம் திருவிழாவில் பக்தர்களுக்கு அருட்காட்சி நல்லூரானின் நேற்றைய 9ஆம் திருவிழாவில் வள்ளி,தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளித்த தருணம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு நாள் திருவிழாவும் பக்தர்களை மெய்சிலிர்க்கும் விதமாக முருகப் பெருமான் அலங்காரங்களுடன் காட்சியளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே நேற்றைய ஒன்பதாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி ,தெய்வானை ஆகியோருடன் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். அலங்காரக் கந்தன் எனப் போற்றப்படும் நல்லூர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் யானை வாகனத்தில் காட்சியளித்தது மக்களின் கண்களையும் உள்ளங்களையும் கவர்ந்துள்ளது. பக்தர்களின் மனதை நெருடும் வகையில் நல்லூரானின் மஹோற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மஞ்சத் திருவிழா நடைபெறவுள்ளது. இன்றைய மஞ்சத்திருவிழாவிலும் முருகன் பல அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.