• Aug 07 2025

கடந்த அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பேராறு பொது நூலகம்! மக்கள் கவலை

Chithra / Aug 7th 2025, 9:30 am
image


கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம், தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பொது நூலகம், தற்போது காடு வளர்ந்து, கரையான் புத்துகள்,  சுவர்கள் வெடித்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. 

2008 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் தவிசாளர் பாரூக்  முயற்சியினால் இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. ஏலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில், நூலகம் கல்விக்கான ஓர் முக்கியமான ஆதாரமாக விளங்கியிருந்தது.

இருப்பினும், பேராறு சனசமூக நிலையம் நூலகத்தை ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை இயங்கச் செய்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நூலகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

"கந்தளாய் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும்  பாடசாலைகள் இருந்தும், மாணவர்களுக்கான ஒரு பொது நூலகம் கூட இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது."

பேராறு நூலகத்தை மீண்டும் புதுப்பித்து, நிரந்தர ஊழியர் நியமித்து, கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு திறந்துவைக்க வேண்டும்  என பேராறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கடந்த அரசாங்கத்தால் கைவிடப்பட்ட பேராறு பொது நூலகம் மக்கள் கவலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகம், தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவது குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறித்த பொது நூலகம், தற்போது காடு வளர்ந்து, கரையான் புத்துகள்,  சுவர்கள் வெடித்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் தவிசாளர் பாரூக்  முயற்சியினால் இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. ஏலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இப்பகுதியில், நூலகம் கல்விக்கான ஓர் முக்கியமான ஆதாரமாக விளங்கியிருந்தது.இருப்பினும், பேராறு சனசமூக நிலையம் நூலகத்தை ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரை இயங்கச் செய்தது. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நூலகம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது."கந்தளாய் பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும்  பாடசாலைகள் இருந்தும், மாணவர்களுக்கான ஒரு பொது நூலகம் கூட இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது."பேராறு நூலகத்தை மீண்டும் புதுப்பித்து, நிரந்தர ஊழியர் நியமித்து, கல்வி வளர்ச்சிக்காக மாணவர்களுக்கு திறந்துவைக்க வேண்டும்  என பேராறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement