• Aug 07 2025

அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைப் புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Chithra / Aug 7th 2025, 11:37 am
image

 இலங்கை அனர்த்த முகாமைத்துவச்  சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கூடிய தேசிய  அனர்த்த முகாமைத்துவ  கவுன்சிலின் 14ஆவது அமர்வின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை   7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.

இதன்போது தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு  அனர்த்த முகாமைத்துவம் செயற்திறனுள்ளதாக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தற்போதைய சட்டத்தை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று குழு முடிவு செய்தது.

அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு  அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை  நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  

அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.

இடம்பெயர்வு முகாம்களில் தொடர்ந்தும் இருக்கும் மக்கள் குறித்தும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியதோடு பதுளை பூனாகலையைச் சேர்ந்த 58 குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்வு முகாம்களில் இருப்பதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. 

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 58 குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே.எம். கபில ஜெயசேகர தெரிவித்தார். 



அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைப் புதுப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு  இலங்கை அனர்த்த முகாமைத்துவச்  சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கூடிய தேசிய  அனர்த்த முகாமைத்துவ  கவுன்சிலின் 14ஆவது அமர்வின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை   7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட அம்சமாகும்.இதன்போது தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு  அனர்த்த முகாமைத்துவம் செயற்திறனுள்ளதாக்குவதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தற்போதைய சட்டத்தை காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்த வேண்டும் என்று குழு முடிவு செய்தது.அத்தோடு,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான தற்போதைய நிதி வரம்புகளை திருத்துதல், தற்போது நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுகள் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு  அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி அறிவுறுத்தினார்.அனர்த்த முகாமைத்துவத்திற்கான நிதியமொன்றை  நிறுவவும் முன்மொழியப்பட்டதோடு இதற்கு சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.  அனர்த்தத்தை எதிர்கொள்ளக் கூடிய வீடுகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களின் பாதுகாப்பை ஆராயவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.இடம்பெயர்வு முகாம்களில் தொடர்ந்தும் இருக்கும் மக்கள் குறித்தும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியதோடு பதுளை பூனாகலையைச் சேர்ந்த 58 குடும்பங்கள் இன்னும் இடம்பெயர்வு முகாம்களில் இருப்பதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 58 குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி ஜே.எம். கபில ஜெயசேகர தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement