• Oct 21 2026

கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்கள் - இருவர் கவலைக்கிடம்! சாரதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Chithra / Oct 20th 2026, 10:42 am
image



கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை பகுதியில் நால்வரின் உயிரைப் பறித்த கோர விபத்து தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குரணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.


மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.


குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரின் நிலை ஆபத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


காயமடைந்தவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களுமே கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி, அக்குறணை குருகொட சந்திக்கு அருகிலுள்ள இடதுபுற வளைவில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது, முதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிய பாரவூர்தி, அதனை சுமார் 160 மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது.அதனைத் தொடர்ந்து நான்கு முச்சக்கரவண்டிகள் மற்றும் மேலும் இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில், வாகனத்தின் பிரேக் செயலிழந்ததால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், சாரதியின் இந்தக் கூற்று உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட மதுபானப் பரிசோதனையில், அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிந்துகொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி   இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்கள் - இருவர் கவலைக்கிடம் சாரதியின் அதிர்ச்சி வாக்குமூலம் கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை பகுதியில் நால்வரின் உயிரைப் பறித்த கோர விபத்து தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குரணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரின் நிலை ஆபத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.காயமடைந்தவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களுமே கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி, அக்குறணை குருகொட சந்திக்கு அருகிலுள்ள இடதுபுற வளைவில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, முதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிய பாரவூர்தி, அதனை சுமார் 160 மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது.அதனைத் தொடர்ந்து நான்கு முச்சக்கரவண்டிகள் மற்றும் மேலும் இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில், வாகனத்தின் பிரேக் செயலிழந்ததால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், சாரதியின் இந்தக் கூற்று உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.அத்துடன், விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட மதுபானப் பரிசோதனையில், அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிந்துகொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி   இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement