• Oct 02 2025

தலவாக்கலையில் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தை! பீதியில் பொதுமக்கள்

Aathira / Sep 21st 2025, 12:44 pm
image

லிந்துலை - தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள ஒரு நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதோடு, 

மேற்படி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்வதும்காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், 

தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருகின்றது

இதன்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களையும், கோழிகளையும் இரையாக இழுத்துச் செல்கிறது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை.

சிறுத்தை ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் மக்கள் மேலும் கூறுகின்றனர்.

இறுதியாக லிந்துலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் உள்ள மக்கள், சுற்றித் திரியும் சிறுத்தையை பிடித்து, வேறு பொருத்தமான சூழலுக்கு அழைத்துச் சென்று விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலவாக்கலையில் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தை பீதியில் பொதுமக்கள் லிந்துலை - தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர்.குறித்த பகுதியில் உள்ள ஒரு நபரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதோடு, மேற்படி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்வதும்காட்சிகளும் பதிவாகியுள்ளன.இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருகின்றதுஇதன்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களையும், கோழிகளையும் இரையாக இழுத்துச் செல்கிறது.தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை.சிறுத்தை ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் மக்கள் மேலும் கூறுகின்றனர்.இறுதியாக லிந்துலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் உள்ள மக்கள், சுற்றித் திரியும் சிறுத்தையை பிடித்து, வேறு பொருத்தமான சூழலுக்கு அழைத்துச் சென்று விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement