யாழ்ப்பாணம் மட்டுவிலில் மீள ஆரம்பிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவால் பொருளாதார மத்திய நிலையம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முதல் தடவையாக திறந்து வைக்கப்பட்டது.
அது பல்வேறு காரணங்களால் செயலிழந்த நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையிலான குழுவினரால் மீள திறந்துவைக்கப்பட்டபோதும் மீண்டும் செயலிழந்து போனது.
இந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்த வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மீளவும் பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதற்கமையவே பொருளாதார மத்திய நிலையம் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன், சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யாழில் மீள ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்; வர்த்தக அமைச்சரால் இன்று திறந்து வைப்பு யாழ்ப்பாணம் மட்டுவிலில் மீள ஆரம்பிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவால் பொருளாதார மத்திய நிலையம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முதல் தடவையாக திறந்து வைக்கப்பட்டது. அது பல்வேறு காரணங்களால் செயலிழந்த நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையிலான குழுவினரால் மீள திறந்துவைக்கப்பட்டபோதும் மீண்டும் செயலிழந்து போனது.இந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்த வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மீளவும் பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.அதற்கமையவே பொருளாதார மத்திய நிலையம் மீள ஆரம்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன், சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.