• May 23 2026

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

Chithra / Sep 30th 2025, 9:02 pm
image


எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை  06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.

லங்கா ஆட்டோ டீசலின் விலையும் 06 ரூபாவால்  குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 277 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் சூப்பர் டீசலின் விலையும் குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம் எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை  06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.லங்கா ஆட்டோ டீசலின் விலையும் 06 ரூபாவால்  குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 277 ரூபாவாகும்.மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் சூப்பர் டீசலின் விலையும் குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement