• May 23 2026

14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்யாக்கிரக போராட்டம்!

shanu / Sep 30th 2025, 5:03 pm
image

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாக  இன்று  (30)  சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொய் வேண்டாம்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்,விவசாயிகளை இப்படியா நடத்துவது விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு மற்றும் அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா?,போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது தொடர்பில் விவசாயிகள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். 352 விவசாயிகளின் காணிகளை சூரையாடியுள்ளனர். இதனை பெற தொடர் போராட்டமாக 14 நாட்களை தாண்டியும் ஈடுபடுகிறோம் இது தொடர்பில் எங்களுக்காக அரச தரப்பில் இருந்தோ அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை இதனை தொடர்ந்து பிரதமர் பத்து நாட்களுக்குல் முடிவை தருவதாக ஆனாலும் அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் - என்றார்கள்.

14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்யாக்கிரக போராட்டம் திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாக  இன்று  (30)  சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பொய் வேண்டாம்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்,விவசாயிகளை இப்படியா நடத்துவது விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு மற்றும் அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா,போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் விவசாயிகள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். 352 விவசாயிகளின் காணிகளை சூரையாடியுள்ளனர். இதனை பெற தொடர் போராட்டமாக 14 நாட்களை தாண்டியும் ஈடுபடுகிறோம் இது தொடர்பில் எங்களுக்காக அரச தரப்பில் இருந்தோ அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை இதனை தொடர்ந்து பிரதமர் பத்து நாட்களுக்குல் முடிவை தருவதாக ஆனாலும் அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் - என்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement