ஒட்டுசுட்டான் நகரை அண்டிய பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (3)இடம்பெற்ற நிலையிலேயே இந்தவிடயம் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளையும், அதனோடு இணைந்த பொது மயானத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள மக்கள் இறந்தவர்களின் உடலங்களை பேராறு பொதுமயானத்திற்கு நீண்டதூரம் கொண்டுசெல்லவேண்டிய அவலநிலை காணப்படுகின்றது.
இவ்வாறாக பலவழிகளிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகின்ற நிலமைகளே காணப்படுகின்றன.
இந்த நிலமை மாற்றப்படவேண்டும். உடனடியாக ஒட்டுசுட்டான் நகர் பகுதியை அண்மித்துள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டு பொதுமயானக்காணி உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். - என்றார்.
இந்த நிலையில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமயானக்காணி மற்றும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி என்பன அரசாங்கத்தால் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுசுட்டானில் இராணுவத்தினரிடமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஒட்டுசுட்டான் நகரை அண்டிய பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (3)இடம்பெற்ற நிலையிலேயே இந்தவிடயம் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கையில்,ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளையும், அதனோடு இணைந்த பொது மயானத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள மக்கள் இறந்தவர்களின் உடலங்களை பேராறு பொதுமயானத்திற்கு நீண்டதூரம் கொண்டுசெல்லவேண்டிய அவலநிலை காணப்படுகின்றது.இவ்வாறாக பலவழிகளிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகின்ற நிலமைகளே காணப்படுகின்றன.இந்த நிலமை மாற்றப்படவேண்டும். உடனடியாக ஒட்டுசுட்டான் நகர் பகுதியை அண்மித்துள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டு பொதுமயானக்காணி உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். - என்றார். இந்த நிலையில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமயானக்காணி மற்றும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி என்பன அரசாங்கத்தால் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.