• Apr 29 2026

16 வயது மகளின் நினைவாக காணி தானம்.! தந்தையொருவரின் மனிதாபிமானச் செயல்

Aathira / Feb 28th 2026, 12:31 pm
image

தனது 16 வயது மகளின் நினைவாக தந்தையொருவர், பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்கே தனது காணிகளை தானமாக வழங்கி வருகிறார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

எம்பிலிபிட்டிய - கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

தனது மகளின் நினைவை நிலைநாட்டும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவர் தனது காணிகளை வழங்க முன்வந்துள்ளார். 

இந்த கிராமத்திற்கு 'லக்சுமி பூமி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த காணியில் குடியேறிய 47 நபர்களுக்கு தலா சில ஏக்கர் அளவு காணி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம், பொது மண்டபம் உள்ளிட்ட வசதிகளுக்கு கூட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

குடியேறிய மக்களுக்கு தேவையான நீர் வசதியையும் கல்யாணசிறி ஏற்படுத்தி வைத்துள்ளார்.

மேலும், காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்கள் ஆனால்  அருகிலுள்ள 4.5 ஏக்கர் கூடுதலான காணியையும் வழங்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, கிராமத்திற்கு மின்சார வசதி பெறுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 வயது மகளின் நினைவாக காணி தானம். தந்தையொருவரின் மனிதாபிமானச் செயல் தனது 16 வயது மகளின் நினைவாக தந்தையொருவர், பல ஏக்கர் காணிகளை தானமாக வழங்கி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்கே தனது காணிகளை தானமாக வழங்கி வருகிறார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,எம்பிலிபிட்டிய - கச்சிகல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ. கல்யாணசிறி என்பவரின் 16 வயது மகள் லக்சுமி தீபிகா, கடந்த 2024 ஆம் ஆண்டு கடுமையான சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.தனது மகளின் நினைவை நிலைநாட்டும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவர் தனது காணிகளை வழங்க முன்வந்துள்ளார். இந்த கிராமத்திற்கு 'லக்சுமி பூமி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த காணியில் குடியேறிய 47 நபர்களுக்கு தலா சில ஏக்கர் அளவு காணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு மைதானம், மூலிகைத் தோட்டம், பொது மண்டபம் உள்ளிட்ட வசதிகளுக்கு கூட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடியேறிய மக்களுக்கு தேவையான நீர் வசதியையும் கல்யாணசிறி ஏற்படுத்தி வைத்துள்ளார்.மேலும், காணியை இழந்தவர்கள் இன்னும் வருவார்கள் ஆனால்  அருகிலுள்ள 4.5 ஏக்கர் கூடுதலான காணியையும் வழங்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கிராமத்திற்கு மின்சார வசதி பெறுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மின்சக்தி அமைச்சர் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement