கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று மாணவியின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் நேற்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பாடசாலை வரவு தொடர்பான ஆவணம் மற்றும் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக பொலிஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு; வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.நேற்று மாணவியின் தாயார் மற்றும் தந்தை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் நேற்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார்.வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பாடசாலை வரவு தொடர்பான ஆவணம் மற்றும் மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக பொலிஸ் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.