"உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்" என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தக் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், தாக்குதலின் பின்னாலுள்ள உண்மை கண்டறியப்படாமல் இருப்பது நாட்டுக்கே தோல்வி என்று சுட்டிக்காட்டினார்.
உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசு தவறினாலும், அதற்காகப் போராடும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நிற்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
"அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி செய்ய முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும், முடியாதவற்றை முடியாது என்று மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்." - என்றார் அவர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நாம் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்தியாவுடனான பேச்சுகளின் போதும் எமது இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்." - என்றார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அச்சப்படுவதாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க அரசு தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மாகாண ஆளுநர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும், மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தனது ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - தமிழ் மக்களின் அபிலாஷைகளை அரசு ஏமாற்றக்கூடாது கஜேந்திரகுமார் எம்.பி. வலியுறுத்து "உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்" என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்தக் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், தாக்குதலின் பின்னாலுள்ள உண்மை கண்டறியப்படாமல் இருப்பது நாட்டுக்கே தோல்வி என்று சுட்டிக்காட்டினார். உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசு தவறினாலும், அதற்காகப் போராடும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நிற்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்."அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.ஜனாதிபதி செய்ய முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும், முடியாதவற்றை முடியாது என்று மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்." - என்றார் அவர்.தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,"நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நாம் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்தியாவுடனான பேச்சுகளின் போதும் எமது இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்." - என்றார்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அச்சப்படுவதாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க அரசு தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.மாகாண ஆளுநர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும், மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தனது ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.