• Jun 14 2026

மத்திய கிழக்கு போருக்கு முடிவு வருகிறதா? ஷெபாஸ் ஷெரீப்பின் திடீர் அறிவிப்பு

Aathira / Jun 13th 2026, 8:28 am
image

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக பதற்றத்தை ஏற்படுத்தி வந்த மோதல்களுக்கு முடிவுகட்டும் வகையில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டும் இறுதி கட்ட உடன்பாட்டை அடைந்துள்ளதாக அவர் தனது 'X' சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்காக இரு தரப்பினருடனும் நெருக்கமான தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றம் நீடித்த காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் ஷெபாஸ் ஷெரீப், "இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் அமைதி இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை" என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்ற சூழ்நிலைக்கு இது ஒரு புதிய திருப்பமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

மத்திய கிழக்கு போருக்கு முடிவு வருகிறதா ஷெபாஸ் ஷெரீப்பின் திடீர் அறிவிப்பு மத்திய கிழக்கில் நீண்டகாலமாக பதற்றத்தை ஏற்படுத்தி வந்த மோதல்களுக்கு முடிவுகட்டும் வகையில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டும் இறுதி கட்ட உடன்பாட்டை அடைந்துள்ளதாக அவர் தனது 'X' சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்காக இரு தரப்பினருடனும் நெருக்கமான தொடர்பில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு பதற்றம் நீடித்த காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் ஷெபாஸ் ஷெரீப், "இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் அமைதி இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை" என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்ற சூழ்நிலைக்கு இது ஒரு புதிய திருப்பமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement