• Oct 13 2026

பிரிட்டனுக்கு ஈரான் சவால்

Ziya / Oct 13th 2026, 11:39 am
image

பிரிட்டனில் அமெரிக்க இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் ராயல் விமானப்படையின் ஃபேர்ஃபோர்ட் தளத்தைச் சுற்றி ஏற்பட்ட பாதுகாப்புச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மீண்டும் மறுத்துள்ளது.


தங்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிடுமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் தெஹ்ரான் கோரியுள்ளது. 


கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, விமானப்படைத் தளத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடைய வாகனங்களில் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்தச் சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இதற்குப் பின்னால் இருந்திருக்கக்கூடும் என பிரிட்டன் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. 


இதற்கிடையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, ஃபேர்ஃபோர்ட் தளத்திலிருந்து அமெரிக்காவின் பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஈரான் இடையிலான ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பிரிட்டனுக்கு ஈரான் சவால் பிரிட்டனில் அமெரிக்க இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் ராயல் விமானப்படையின் ஃபேர்ஃபோர்ட் தளத்தைச் சுற்றி ஏற்பட்ட பாதுகாப்புச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மீண்டும் மறுத்துள்ளது.தங்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிடுமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் தெஹ்ரான் கோரியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, விமானப்படைத் தளத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடைய வாகனங்களில் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈரானின் பங்கு இருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இதற்குப் பின்னால் இருந்திருக்கக்கூடும் என பிரிட்டன் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. இதற்கிடையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, ஃபேர்ஃபோர்ட் தளத்திலிருந்து அமெரிக்காவின் பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஈரான் இடையிலான ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement