2027கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் இலங்கை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கு ஹலோட்ரஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஹலோட்ரஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் Hannah Picton தெரிவிப்பு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத்தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்
ஹேலோ ரஸ்ட் உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இவ்வமைப்பு, 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் (Muhamalai) 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கையால் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.
1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.
கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது. இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து ஹேலோ டிரஸ்ட் மற்றும் பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக அறிவிப்பதே முதன்மை இலக்காகும்.
இதற்காக முகமாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலுள்ள நிலங்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலப்பரப்புகளைக் ஒப்படைத்த பிறகும், ஆபத்து விழிப்புணர்வு (Risk Education) கல்வியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும், அரசால் வழங்கப்படும் வீட்டு வசதிகள் மற்றும் விவசாய நில மேம்பாடுகளுக்கு உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து உதவி வழங்கி வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் ஆதரவினால் மட்டுமே இத்திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன. என தெரிவித்தார்
2027ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்ற இலக்கு - ஹேலோ டிரஸ்ட் . 2027கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் இலங்கை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கு ஹலோட்ரஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஹலோட்ரஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் Hannah Picton தெரிவிப்பு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத்தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் ஹேலோ ரஸ்ட் உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இவ்வமைப்பு, 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் (Muhamalai) 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கையால் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன. 1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது. இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து ஹேலோ டிரஸ்ட் மற்றும் பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக அறிவிப்பதே முதன்மை இலக்காகும். இதற்காக முகமாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலுள்ள நிலங்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நிலப்பரப்புகளைக் ஒப்படைத்த பிறகும், ஆபத்து விழிப்புணர்வு (Risk Education) கல்வியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும், அரசால் வழங்கப்படும் வீட்டு வசதிகள் மற்றும் விவசாய நில மேம்பாடுகளுக்கு உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து உதவி வழங்கி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் ஆதரவினால் மட்டுமே இத்திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன. என தெரிவித்தார்