மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பயிர் மாற்றுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட திஸ்ஸ இன நிலக்கடலை அறுவடை விழா பரந்தன் பகுதியில் அ.மதன்குமார் என்ற விவசாயின் வயலில் இன்று நடைபெற்றது.
குமரபுரம் பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் நி.எழினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கல்மடு அரச மூலிகைப்பண்ணை வைத்தியர், பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாய. போதனாசிரியர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வயல்களில் சிறுபோக நெல் அறுவடையைத்தொடர்ந்து பயிர் மாற்றுத்திட்டத்தின் மூலம் ஏனைய சிறுதானிய பயிர்களின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் குறித்த திட்டம் விவசாயத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சியில் பயிர் மாற்றுத்திட்டம் திஸ்ஸ இன நிலக்கடலை அறுவடை ஆரம்பம் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பயிர் மாற்றுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட திஸ்ஸ இன நிலக்கடலை அறுவடை விழா பரந்தன் பகுதியில் அ.மதன்குமார் என்ற விவசாயின் வயலில் இன்று நடைபெற்றது. குமரபுரம் பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் நி.எழினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வில் கல்மடு அரச மூலிகைப்பண்ணை வைத்தியர், பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாய. போதனாசிரியர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வயல்களில் சிறுபோக நெல் அறுவடையைத்தொடர்ந்து பயிர் மாற்றுத்திட்டத்தின் மூலம் ஏனைய சிறுதானிய பயிர்களின் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் குறித்த திட்டம் விவசாயத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.