யாழ்ப்பாணத்திலிருந்து நெல் விதைப்புப் பணிக்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பம், ஏ9 வீதியின் புளியங்குளம் புதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.
வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் குழந்தை புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். தாய் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த துயரம் தந்தையும் குழந்தையும் பலி யாழ்ப்பாணத்திலிருந்து நெல் விதைப்புப் பணிக்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பம், ஏ9 வீதியின் புளியங்குளம் புதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் காயமடைந்த தந்தை, தாய் மற்றும் குழந்தை புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும், சிகிச்சை பலனின்றி தந்தையும் ஒரு வயதுக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். தாய் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.