முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவ்வாறு நடக்கவில்லை எனில் தனது யூடியூப் தளத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இந்த பின்னணியில் முன்னார் ஜனாதிபதி வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத் திலகசிறி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்தரணிகள் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறியை விசாரியுங்கள்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.அத்துடன் அவ்வாறு நடக்கவில்லை எனில் தனது யூடியூப் தளத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.இந்த பின்னணியில் முன்னார் ஜனாதிபதி வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத் திலகசிறி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்தரணிகள் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.