• Jul 06 2026

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு

Chithra / Jul 6th 2026, 11:36 am
image


எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.


பிரைட் ரைஸ், கொத்து, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.


எனினும்,  பாண் (Bread), பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை எவ்வகையிலும் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


எரிவாயு விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டதால் பேக்கரி உற்பத்திகளுக்கு எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்


பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.பிரைட் ரைஸ், கொத்து, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.எனினும்,  பாண் (Bread), பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை எவ்வகையிலும் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.எரிவாயு விலை சிறிய அளவில் குறைக்கப்பட்டதால் பேக்கரி உற்பத்திகளுக்கு எந்தப் பயனும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement