இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு அநுர அரசால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது என அந்தக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஊடகங்கள் ஊடாவே பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் இந்த நாட்டில் ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்.
அதேபோன்று தகவல் அறியும் சட்டத்தையும் அமைத்தார். அந்த சட்டம் மூலம் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். ஏனெனில் பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கும் என்றால், தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை மக்களை அறிவுறுத்துவது ஊடகங்களின் கடமையாகும்.
மனிதர்கள் பிறப்பில் தவறு செய்வதில்லை. அதனால் தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஊடகங்களை பயமுறுத்துவதோ அல்லது அவற்றுக்கு எதிராக செயற்படுவதோ முறையல்ல.
ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதாக இருந்தால் அது பாரிய பேரழிவாகும். அதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்றார்.
ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவது அரசாங்கத்துக்கு பாரிய பேரழிவாகும் - ஐ.தே.க. குற்றச்சாட்டு இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு அநுர அரசால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது என அந்தக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஊடகங்கள் ஊடாவே பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் இந்த நாட்டில் ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான சட்ட திட்டங்களை அனுமதித்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கி இருந்தார்.அதேபோன்று தகவல் அறியும் சட்டத்தையும் அமைத்தார். அந்த சட்டம் மூலம் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். ஏனெனில் பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமை இருக்கும் என்றால், தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை மக்களை அறிவுறுத்துவது ஊடகங்களின் கடமையாகும்.மனிதர்கள் பிறப்பில் தவறு செய்வதில்லை. அதனால் தவறுகளை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஊடகங்களை பயமுறுத்துவதோ அல்லது அவற்றுக்கு எதிராக செயற்படுவதோ முறையல்ல.ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதாக இருந்தால் அது பாரிய பேரழிவாகும். அதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்றார்.