• May 15 2025

நாட்டில் அதிகரிக்கும் சின்னம்மை தொற்று; தடுப்பூசிக்கு பற்றாக்குறை!

Chithra / May 14th 2025, 1:34 pm
image


நாட்டில் தற்போது சின்னம்மை (Chicken Pox) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும்,  வைத்தியசாலைகளில் தற்போது நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி பாற்றாக்குறை நிலவுவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

தடுப்பூசி விலை 7,500 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை காணப்படுகிறது. அரசாங்க வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகையில்,

இந்த வைரஸ் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடாத நபர்களிடமிருந்து மற்றையவர்களுக்குப் பரவுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களில் 90 சதவீதமானோருக்கு பரவக்கூடும்.

இந்த நோய் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை தடுப்பூசியைப் பெறுவதே என தெரிவித்துள்ளார். 

நாட்டில் அதிகரிக்கும் சின்னம்மை தொற்று; தடுப்பூசிக்கு பற்றாக்குறை நாட்டில் தற்போது சின்னம்மை (Chicken Pox) நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும்,  வைத்தியசாலைகளில் தற்போது நோயைத் தடுக்க உதவும் வெரிசெல்லா தடுப்பூசி பாற்றாக்குறை நிலவுவதாக தவல்கள் வெளியாகியுள்ளன.தடுப்பூசி விலை 7,500 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை காணப்படுகிறது. அரசாங்க வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுகிறது.இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறுகையில்,இந்த வைரஸ் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடாத நபர்களிடமிருந்து மற்றையவர்களுக்குப் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களில் 90 சதவீதமானோருக்கு பரவக்கூடும்.இந்த நோய் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை தடுப்பூசியைப் பெறுவதே என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement