யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராஜசிங்கம் வீதி குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதான செல்வம் றொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரவூர்தியின் சாரதியை மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிளும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - ஒருவர் பலி யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராஜசிங்கம் வீதி குருநகர் பகுதியை சேர்ந்த 44 வயதான செல்வம் றொபின் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியின் சாரதியை மருத்துவ பரிசோதனையின் பின்னர் நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.