கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பகுதிக்குட்பட்ட கிண்ணியா ஏ-15 பிரதான வீதியில் நடைபெறுகின்ற மீன் சந்தையில் சுகாதாரத்துக்கு கேடான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற முறைப்பாடுகளுக்கு அமைய மீன் சந்தையை கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகதார மருத்துவ அதிகாரிகள் சகிதம் மீன்களை பரிசோதிப்பதற்காக திடீர் சுற்றி வளைக்கும் பணிகள் இடம் பெற்றன.
இதன் போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டு தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டது
இனி வரும் காலங்களில் இவ்வாறான பாவனைக்கு உதவாத மீன்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கிண்ணியாவில்: பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுதிருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை பகுதிக்குட்பட்ட கிண்ணியா ஏ-15 பிரதான வீதியில் நடைபெறுகின்ற மீன் சந்தையில் சுகாதாரத்துக்கு கேடான மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற முறைப்பாடுகளுக்கு அமைய மீன் சந்தையை கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகதார மருத்துவ அதிகாரிகள் சகிதம் மீன்களை பரிசோதிப்பதற்காக திடீர் சுற்றி வளைக்கும் பணிகள் இடம் பெற்றன.இதன் போது பாவனைக்கு உதவாத ஒரு தொகை மீன்கள் கைப்பற்றப்பட்டு தவிசாளர் முன்னிலையில் அழிக்கப்பட்டது இனி வரும் காலங்களில் இவ்வாறான பாவனைக்கு உதவாத மீன்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.⭕https://web.facebook.com/24Samugam/videos/2502891723423431