• Apr 15 2026

கொழும்பில் 33 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் அமைச்சரால் வழங்கிவைப்பு

Chithra / Feb 23rd 2026, 1:28 pm
image


"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் 'ஹிமிகம' (Himikama) இலவச காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம், அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் இன்று காலை காணி அமைச்சில் நடைபெற்றது. 


இதன்போது கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 33 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

 

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சிலர் பிடித்து வைத்திருந்தனர். சாதாரண மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. 


உண்மையில் சாதாரண மக்களுக்குக் காணிகளை வழங்கும் வேலைத்திட்டம் உருவாவதற்கு 71-ஆம் ஆண்டு கிளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்தது.


அரசியல் மற்றும் அரச சேவையில் காணப்பட்ட பலவீனங்களாலேயே மக்களுக்குக் காணிகளை வழங்க முடியாமல் போனது.


மக்களுக்குரிய காணி உரிமைகளை வழங்காமல் அரசாங்கம் வைத்திருப்பது முற்றிலும் தவறானது. குறைந்தபட்சம் 5,000 காணி உறுதிப்பத்திரங்களையாவது மக்களுக்கு வழங்க நாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் 33 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் அமைச்சரால் வழங்கிவைப்பு "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் 'ஹிமிகம' (Himikama) இலவச காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம், அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் இன்று காலை காணி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 33 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சிலர் பிடித்து வைத்திருந்தனர். சாதாரண மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்குக் காணிகளை வழங்கும் வேலைத்திட்டம் உருவாவதற்கு 71-ஆம் ஆண்டு கிளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்தது.அரசியல் மற்றும் அரச சேவையில் காணப்பட்ட பலவீனங்களாலேயே மக்களுக்குக் காணிகளை வழங்க முடியாமல் போனது.மக்களுக்குரிய காணி உரிமைகளை வழங்காமல் அரசாங்கம் வைத்திருப்பது முற்றிலும் தவறானது. குறைந்தபட்சம் 5,000 காணி உறுதிப்பத்திரங்களையாவது மக்களுக்கு வழங்க நாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement