கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லையெனவும், மகாவலி அதிகாரசபையை வடபகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு அண்மையில் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ் மக்களின் தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு பெரும்பான்மையினத்தவருக்கு சட்டவிரோத அனுமதி வழங்கிய மகாவலி அதிகாரசபையின் இன விரோத செயற்பாட்டிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துடன், குறித்த விவகாரத்திற்கு உரிய நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நிலம் என்பது வெறும் சொத்தல்ல. அது உறவினர் நம் ஒவ்வொருவருக்கும், பெற்றோர், மூதாதையர்கள், மற்றும் நிலத்துடன் பிணைக்கப்பட்ட தொடர்பு உள்ளது. அந்தவகையில் நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலச்சாரம் எமக்கு உள்ளது என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் கடந்த 27.02.2026 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.
இதனைத் தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் ஒருபகுதிமக்கள் நம்பிக்கொண்டிருக்கும்சமயம் இது.
ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள்.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாச்சாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஜனாதிபதி உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த 27.02.2026 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும்.
நில அளவையாளர் நாயகம் அவர்களால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் Top off pp 70 இலக்க வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன.
எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது.
ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.
இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே என்பதைக் கூறிக்கொள்வதுடன் அதற்காக எனது வன்மையான கண்டனத்தை இந்த உயரிய சபையிலே பதிவுசெய்துகொள்கின்றேன்.
இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன்.
கடந்த 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை மகாவலி அதிகாரசபை மேற்கொள்கின்றது.
மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது.
மகாவலி அதிகாரசபை அபிவிருத்தி என்னும் சொல்லாடலைக் கையாண்டு தீய எண்ணத்துடன் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு அபகரித்து தமிழர்களது பூர்வீக ஊர்களின் பெயர்களை இலங்கை வரைபடத்திலிருந்து நீக்குவதுடன், அந்த இடங்களுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி தமிழ் இனத்தின் தேச அடையாளத்தை அழிக்கின்றனர்.
அத்தோடு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு அதிகளவில் சிங்களக் குடியேற்றங் குடியேற்றங்களையும் மேற்கொண்டு தமிழ்மக்களை அவர்களின் தாயகப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுகின்றவிதமான மிக மோசமான செயற்பாட்டையும் மகாவலி அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது.
எனவே மாகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.
வடக்கிலிருந்து மகாவலி அதிகாரசபையை உடனடியாக வெளியேற்றுக - ரவிகரன் எம்பி வலியுறுத்து கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லையெனவும், மகாவலி அதிகாரசபையை வடபகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.அத்தோடு அண்மையில் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ் மக்களின் தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு பெரும்பான்மையினத்தவருக்கு சட்டவிரோத அனுமதி வழங்கிய மகாவலி அதிகாரசபையின் இன விரோத செயற்பாட்டிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துடன், குறித்த விவகாரத்திற்கு உரிய நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உலகில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நிலம் என்பது வெறும் சொத்தல்ல. அது உறவினர் நம் ஒவ்வொருவருக்கும், பெற்றோர், மூதாதையர்கள், மற்றும் நிலத்துடன் பிணைக்கப்பட்ட தொடர்பு உள்ளது. அந்தவகையில் நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலச்சாரம் எமக்கு உள்ளது என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் கடந்த 27.02.2026 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். இதனைத் தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் ஒருபகுதிமக்கள் நம்பிக்கொண்டிருக்கும்சமயம் இது.ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள்.வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாச்சாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.ஜனாதிபதி உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த 27.02.2026 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகம் அவர்களால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் Top off pp 70 இலக்க வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன.எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது.ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே என்பதைக் கூறிக்கொள்வதுடன் அதற்காக எனது வன்மையான கண்டனத்தை இந்த உயரிய சபையிலே பதிவுசெய்துகொள்கின்றேன்.இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருகின்றேன்.கடந்த 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை மகாவலி அதிகாரசபை மேற்கொள்கின்றது.மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது.மகாவலி அதிகாரசபை அபிவிருத்தி என்னும் சொல்லாடலைக் கையாண்டு தீய எண்ணத்துடன் தமிழர்களின் நிலங்களை திட்டமிட்டு அபகரித்து தமிழர்களது பூர்வீக ஊர்களின் பெயர்களை இலங்கை வரைபடத்திலிருந்து நீக்குவதுடன், அந்த இடங்களுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி தமிழ் இனத்தின் தேச அடையாளத்தை அழிக்கின்றனர். அத்தோடு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு அதிகளவில் சிங்களக் குடியேற்றங் குடியேற்றங்களையும் மேற்கொண்டு தமிழ்மக்களை அவர்களின் தாயகப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் இனப்பரம்பல் கோலத்தை மாற்றுகின்றவிதமான மிக மோசமான செயற்பாட்டையும் மகாவலி அதிகாரசபை மேற்கொண்டுவருகின்றது.எனவே மாகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.