• Apr 21 2026

கிண்ணியாவில் சட்டவிரோத சிப்பித் தொழிற்சாலைகள் முற்றுகை: இருவர் கைது!

Chithra / Feb 25th 2026, 9:00 am
image


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புப் பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த இரண்டு சிப்பித் தொழிற்சாலைகளை மாவட்ட குற்றப் புலனாய்வுப்  பிரிவினர் நேற்று(24) முற்றுகையிட்டுள்ளனர்.


இந்த அதிரடி நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவிலான சிப்பிகள் மற்றும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு. மஹிந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஐய். அருண சமந்த சந்திரபாலவின் மேற்பார்வையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எல். அஜித் குமாரவின் வழிகாட்டலில் இச்சோதனை நடத்தப்பட்டது.


இதன்போது, 127 மூடை சேமித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிகள், 04 சிப்பி அரைக்கும் இயந்திரங்கள், குவித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரைக்கப்பட்ட சிப்பிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


கிண்ணியாவில் சட்டவிரோத சிப்பித் தொழிற்சாலைகள் முற்றுகை: இருவர் கைது திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புப் பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த இரண்டு சிப்பித் தொழிற்சாலைகளை மாவட்ட குற்றப் புலனாய்வுப்  பிரிவினர் நேற்று(24) முற்றுகையிட்டுள்ளனர்.இந்த அதிரடி நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவிலான சிப்பிகள் மற்றும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யு. மஹிந்த திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஐய். அருண சமந்த சந்திரபாலவின் மேற்பார்வையில், பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எல். அஜித் குமாரவின் வழிகாட்டலில் இச்சோதனை நடத்தப்பட்டது.இதன்போது, 127 மூடை சேமித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிகள், 04 சிப்பி அரைக்கும் இயந்திரங்கள், குவித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அரைக்கப்பட்ட சிப்பிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கிண்ணியா, காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement