நெஞ்செரிச்சல் (Heartburn) என்பது செரிமானக் கோளாறின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.
இது பொதுவாக மார்புப் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) தகவல்படி, வாழ்நாளில் ஒருமுறையாவது பெரும்பாலானோர் இந்தப் பிரச்னையை அனுபவிக்கிறார்கள்.
குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அதிக கொழுப்பு, மசாலா உணவுகள் மற்றும் மதுபானம் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்னை அதிகரிக்கிறது.
லண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ராயல் லண்டன் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணருமான மருத்துவர் பிலிப் வுட்லேண்ட்,
“வயிற்றில் உள்ள அமில சாறுகள் உணவுக்குழாயின் வழியாக மேல்நோக்கிச் செல்லும் நிலையே ‘ஆசிட் ரிஃப்ளக்ஸ்’. இதன் முக்கிய அறிகுறிதான் நெஞ்செரிச்சல்”என விளக்குகிறார்.
எந்தெந்த உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றன?
மருத்துவர்கள் கூறுவதாவது:
அதிக அளவில் உணவு உட்கொள்வது, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள்,மதுபானம் (குறிப்பாக வெள்ளை ஒயின்),காஃபின்,சாக்லேட்,நுரை வரும் குளிர்பானங்கள்,காரமான உணவுகள் என்கின்றனர்.
ரீடிங் பல்கலைக்கழகத்தின் இரைப்பை குடல் நிபுணர் மருத்துவர் ஜேம்ஸ் கென்னடி,
“சில உணவுகள் வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கின்றன. சில உணவுகள் வயிற்றுக்கும் உணவுக்குழாயுக்கும் இடையிலுள்ள தசைகளைத் தளர்த்தி, அமிலம் மேலே செல்ல வழிவகுக்கின்றன” என்று கூறுகிறார்.
எந்த உணவுகள் நமக்கு பிரச்னை தருகின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஒரே நேரத்தில் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டாம்.ஒரு உணவை மட்டும் சில நாட்கள் தவிர்த்து பாருங்கள் அறிகுறிகள் குறைந்தால், மீண்டும் அந்த உணவைச் சேர்த்து பாருங்கள் மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அந்த உணவே காரணம் இதையே மருத்துவர்கள் “Elimination Diet” முறை என அழைக்கிறார்கள்.
நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் உணவுகள் உள்ளனவா?
“ஆசிட் ரிஃப்ளக்ஸை முழுமையாகக் குணப்படுத்தும் தனிப்பட்ட உணவு எதுவும் இல்லை”என மருத்துவர் வுட்லேண்ட் கூறுகிறார்.
ஆனால் அதிக கொழுப்பு உணவுகளை குறைப்பது,தூங்குவதற்கு முன் உணவு தவிர்ப்பது,இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் 3–4 மணி நேர இடைவெளி வைப்பது போன்றவை நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த உதவும்.
சிலருக்கு ஏன் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது?
அதிக ஆபத்து உள்ளவர்கள் உடல் பருமன் உள்ளவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள்,ஹையாட்டஸ் ஹெர்னியா உள்ளவர்களாவர்.
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நெஞ்செரிச்சலைக் குறைக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களாக எடை அதிகமாக இருந்தால் குறைக்க முயலுங்கள்,புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்,
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் என்பனவற்றினை கவனத்தில் கொள்ளவேண்டும்.
திடீர் உடல் எடை குறைதல்,விழுங்குவதில் சிரமம்,தொடர்ச்சியான நெஞ்செரிச்சல்,விரைவில் வயிறு நிறைந்த உணர்வு,உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:
இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது உங்களுக்கான சரியான சிகிச்சைக்காக தகுதியான மருத்துவ நிபுணரை அணுகவும்.
நெஞ்செரிச்சலை தவிர்ப்பது எப்படி கட்டுப்படுத்து உணவுகள் நெஞ்செரிச்சல் (Heartburn) என்பது செரிமானக் கோளாறின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.இது பொதுவாக மார்புப் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) தகவல்படி, வாழ்நாளில் ஒருமுறையாவது பெரும்பாலானோர் இந்தப் பிரச்னையை அனுபவிக்கிறார்கள்.குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அதிக கொழுப்பு, மசாலா உணவுகள் மற்றும் மதுபானம் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்னை அதிகரிக்கிறது.லண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், ராயல் லண்டன் மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணருமான மருத்துவர் பிலிப் வுட்லேண்ட்,“வயிற்றில் உள்ள அமில சாறுகள் உணவுக்குழாயின் வழியாக மேல்நோக்கிச் செல்லும் நிலையே ‘ஆசிட் ரிஃப்ளக்ஸ்’. இதன் முக்கிய அறிகுறிதான் நெஞ்செரிச்சல்”என விளக்குகிறார்.எந்தெந்த உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றனமருத்துவர்கள் கூறுவதாவது:அதிக அளவில் உணவு உட்கொள்வது, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள்,மதுபானம் (குறிப்பாக வெள்ளை ஒயின்),காஃபின்,சாக்லேட்,நுரை வரும் குளிர்பானங்கள்,காரமான உணவுகள் என்கின்றனர்.ரீடிங் பல்கலைக்கழகத்தின் இரைப்பை குடல் நிபுணர் மருத்துவர் ஜேம்ஸ் கென்னடி,“சில உணவுகள் வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கின்றன. சில உணவுகள் வயிற்றுக்கும் உணவுக்குழாயுக்கும் இடையிலுள்ள தசைகளைத் தளர்த்தி, அமிலம் மேலே செல்ல வழிவகுக்கின்றன” என்று கூறுகிறார்.எந்த உணவுகள் நமக்கு பிரச்னை தருகின்றன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதுஒரே நேரத்தில் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டாம்.ஒரு உணவை மட்டும் சில நாட்கள் தவிர்த்து பாருங்கள் அறிகுறிகள் குறைந்தால், மீண்டும் அந்த உணவைச் சேர்த்து பாருங்கள் மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அந்த உணவே காரணம் இதையே மருத்துவர்கள் “Elimination Diet” முறை என அழைக்கிறார்கள்.நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் உணவுகள் உள்ளனவா“ஆசிட் ரிஃப்ளக்ஸை முழுமையாகக் குணப்படுத்தும் தனிப்பட்ட உணவு எதுவும் இல்லை”என மருத்துவர் வுட்லேண்ட் கூறுகிறார்.ஆனால் அதிக கொழுப்பு உணவுகளை குறைப்பது,தூங்குவதற்கு முன் உணவு தவிர்ப்பது,இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் 3–4 மணி நேர இடைவெளி வைப்பது போன்றவை நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த உதவும்.சிலருக்கு ஏன் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படுகிறதுஅதிக ஆபத்து உள்ளவர்கள் உடல் பருமன் உள்ளவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள்,ஹையாட்டஸ் ஹெர்னியா உள்ளவர்களாவர்.55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.நெஞ்செரிச்சலைக் குறைக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களாக எடை அதிகமாக இருந்தால் குறைக்க முயலுங்கள்,புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்,பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் என்பனவற்றினை கவனத்தில் கொள்ளவேண்டும்.திடீர் உடல் எடை குறைதல்,விழுங்குவதில் சிரமம்,தொடர்ச்சியான நெஞ்செரிச்சல்,விரைவில் வயிறு நிறைந்த உணர்வு,உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனையாகக் கருதப்படக் கூடாது உங்களுக்கான சரியான சிகிச்சைக்காக தகுதியான மருத்துவ நிபுணரை அணுகவும்.