• Jun 13 2026

திடீரென தரையில் வேகமாக சுழன்றடித்த ஹெலிகாப்டர்- மரணத்தின் விளிம்பில் இருவர்!

Ziya / Jun 13th 2026, 2:44 pm
image

https://www.facebook.com/share/v/1LxingWrM5/


சீனாவின் வூஜின் (Wujin) நகரில் வயல்வெளி ஒன்றில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்  இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பிரதான சுழல் இறக்கைகள் (Rotator Blades) அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்க, அதன் கட்டுப்பாடற்ற அதிர்வினால் விமானியின் அறைக்குள் (Cockpit) இருந்த விமானியும் பயணியும்  பொம்மைகளைப் போலக் கொடூரமாக உலுக்கப்பட்ட திகில் நிமிடங்கள் பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளன.


விபத்து நடந்தை தொடர்ந்து  ஹெலிகாப்டர் கட்டுப்பாடின்றி தரைப்பகுதியில் சுழன்றதில், உள்ளே இருந்தவர்களில் ஒருவர் கதவுக்கு வெளியே பாதி உடல் தொங்கிய நிலையிலும், மற்றொருவர் பாதுகாப்புப் பட்டையுடன் (Seatbelt) இருக்கையிலும் சிக்கிக் கொண்டனர்.


விபத்தைக் கண்டு அருகிலிருந்த சாலையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், விபத்துக்குப் பிறகும் ஹெலிகாப்டரின் இறக்கைகள் ராட்சத வேகத்தில் சுழன்று ஆபத்தை ஏற்படுத்தியதால், ஆபத்தான நிலையில் உள்ளே தவித்த இருவரையும் உடனடியாக மீட்க முடியாமல்  தவித்தனர்.


சுழலி இறக்கைகளின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரச் சேவைப் பிரிவினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து சீன வான்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


திடீரென தரையில் வேகமாக சுழன்றடித்த ஹெலிகாப்டர்- மரணத்தின் விளிம்பில் இருவர் https://www.facebook.com/share/v/1LxingWrM5/சீனாவின் வூஜின் (Wujin) நகரில் வயல்வெளி ஒன்றில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள்  இணையத்தில் வைரலாகியுள்ளது.ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து போனதாகக் கூறப்பட்டதை அடுத்து, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பிரதான சுழல் இறக்கைகள் (Rotator Blades) அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்க, அதன் கட்டுப்பாடற்ற அதிர்வினால் விமானியின் அறைக்குள் (Cockpit) இருந்த விமானியும் பயணியும்  பொம்மைகளைப் போலக் கொடூரமாக உலுக்கப்பட்ட திகில் நிமிடங்கள் பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளன.விபத்து நடந்தை தொடர்ந்து  ஹெலிகாப்டர் கட்டுப்பாடின்றி தரைப்பகுதியில் சுழன்றதில், உள்ளே இருந்தவர்களில் ஒருவர் கதவுக்கு வெளியே பாதி உடல் தொங்கிய நிலையிலும், மற்றொருவர் பாதுகாப்புப் பட்டையுடன் (Seatbelt) இருக்கையிலும் சிக்கிக் கொண்டனர்.விபத்தைக் கண்டு அருகிலிருந்த சாலையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், விபத்துக்குப் பிறகும் ஹெலிகாப்டரின் இறக்கைகள் ராட்சத வேகத்தில் சுழன்று ஆபத்தை ஏற்படுத்தியதால், ஆபத்தான நிலையில் உள்ளே தவித்த இருவரையும் உடனடியாக மீட்க முடியாமல்  தவித்தனர்.சுழலி இறக்கைகளின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரச் சேவைப் பிரிவினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து சீன வான்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement