• Aug 27 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு!

shanuja / Aug 26th 2025, 11:32 am
image

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்  பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 


அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திலும் அதனை சுற்றிய வளாகத்திலும் பாதுகாப்புப் பலத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பலத்த பாதுகாப்பு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புறப்  பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிந்துரைகளின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்திலும் அதனை சுற்றிய வளாகத்திலும் பாதுகாப்புப் பலத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement